வணக்கம் என் அன்பு தமிழ் மக்களே! இன்று மார்ச் 10 என்ன நாள் தெரியுமா?
உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுவது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அதேபோலவே மார்ச் 10 அன்று ஒரு பிரம்மாண்டமான தினம் கொண்டாடப்படுகிறது.
அது என்ன தினம் என்றால் "சர்வதேச விக் தினம் (National Wig Day) "மார்ச் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
கடுமையான தோல் நோயினால் பாதிக்கப்பட்டு தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து, வழுக்கையாகி பின்னர் வழுக்கையை மறைக்க விக் பயன்படுத்துவோம் பல பேர் உள்ளனர்.
மேலும் ஒரு வகையினர் அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் வழுக்கையாக சொட்டையாக இருந்தால் அதே போல அவர்களது சந்ததியினருக்கும் வழுக்கை, சொட்டை வரும்.
இந்த தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காக வழுக்கையான பல பேர் விக் பயன்படுத்துவது உண்டு.
அவ்வாறாக விக் பயன்படுத்துவோர் கொண்டாட வேண்டியது மார்ச் 10 ஆன இந்த நாள்.
